தேயிலை தொடர்பாக கவனம் செலுத்தினால்......
உலகிலேயே மிகச்சிறந்த தேயிலை இலங்கைத் தேயிலை” என்ற பெயரைப் பெற்றுக்கொள்ள ஜேம்ஸ் டெய்லரின் பங்களிப்பும், உழைப்பும் மிகவும் மகத்தானது. ஆனாலும் இந்த நிலையை அடைவதற்கு மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதாக இருந்தது. அதற்குக் காரணம் இலங்கைத் தேயிலைக்கு முன்னதாகவே சீன, இந்தியத் தேயிலைகள் உலக சந்தையை மிக வலுவாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தமையாகும். இதன் காரணமாக, ‘இலங்கைத் தேயிலை மிகச் சிறந்த தரத்தில் ஆனது’ என்ற தகுதியை வைத்து அது உலக சந்தையை வெற்றி கொள்ள வேண்டியதாக இருந்தது.

மிகக்குறுகிய காலத்திலேயே இலங்கையில் தேயிலை உற்பத்தித்துறை பன்மடங்கு வளர்ச்சி கண்டது. பல தேயிலைத் தோட்ட துரைமார்கள் ஜேம்ஸ் டெய்லரின் உற்பத்தி முறையைப் பின்பற்றலாயினர். 1882 ஆம் ஆண்டு 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு 7 லட்சம் இறாத்தல் மாத்திரமே ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை பின்னர் 1886ஆம் ஆண்டு சுமார் நான்கு வருடங்களிலேயே 900 தோட்டங்களில் செய்கை பண்ணப்படுமளவுக்கு விஸ்வரூபமெடுத்தது. 1907ஆம் ஆண்டில் 3 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட 170 மில்லியன் இறாத்தல் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. இவ்வாண்டில் 16 ஆயிரம் தேயிலைத் தோட்டங்கள் உருவாகி இருந்ததுடன் இவற்றில் 4 லட்சம் கூலித் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். இதற்கான மொத்த முதலீடு 50 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்டாக அதிகரித்திருந்தது.
அக்காலத்தில் புகழ்பெற்ற ஊடகவியலாளராக இருந்த ஜோன் பெர்குசன் (John Ferguson) இது தொடர்பில் வியந்து குறிப்பிடுகையில் :- “வரலாற்றில் என்றும் இல்லாதபடி பாரியளவில் தேயிலையானது கோப்பி இருந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு ஆச்சரியப்படத்தக்க வகையில் அபிவிருத்தி அடைந்துள்ளது. அது, தான் இருக்கவேண்டிய எல்லைகளையும் தாண்டி இலங்கை முழுவதிலும் வியாபித்துள்ளது” என்றார். இதனை அடுத்துவந்த மூன்று வருடங்களில் இங்கிலாந்தில் அபர்டீன் என்ற இடத்தில் இயங்கிய உலகின் புகழ்பெற்ற தேயிலை வர்த்தக நிறுவனமான ’வெஸ்ட்லேண்ட் சிலோன் டீ நிறுவனம்’ (Westland Ceylon Tea Agency) உலகின் அனைத்து தேயிலைகளிலும் இன்றைய சிறந்த தேயிலை இலங்கைத் தேயிலை தான் என்பதற்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டது” எனப் பிரகடனப்படுத்தியது.

1885 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் தேயிலைக் கொள்வனவில், சீனத் தேயிலை 62 சதவீதத்தைத் தனது பங்காகக் கொண்டிருந்தது. இது 1895 ஆம் ஆண்டில் 14 சதவீதமாக குறைந்து போனது. இக்காலத்தில் பிரித்தானியா 35 சதவீதமான தேயிலையை இலங்கையிடம் இருந்து கொள்வனவு செய்தது. பிரிட்டனில் இவ்விதம் இலங்கைத் தேயிலையின் நுகர்வின் அதிகரிப்பும், ஏனைய நாடுகளில் உருவான தேயிலைக்கான அதிகரித்த கேள்வியும் இலங்கையில் தேயிலைப் பயிர்ச் செய்கைக்கான ஆர்வத்தை சடுதியாக அதிகரித்தன. இதனால் அழிந்து போய்க் கொண்டிருந்த கோப்பித் தோட்டக் காணிகளுக்கு திடீரென மவுசு அதிகரித்து, அவற்றை தேயிலை உற்பத்தியாளர்கள் அதிக விலை கொடுத்து வாங்கி, கோப்பிச் செடிகளை வேரோடு பிடுங்கி, அவை இருந்த இடத்தில் தேயிலைச் செடிகளை நாட்டினர். கோப்பிச் செடிகள் போலல்லாது தேயிலைச் செடிகள் அதி உயர் மலைப் பிரதேசங்களான 5000 அடி உயரப் பிரதேசங்களிலும் செழிப்பாக வளர்ந்தன. மத்திய மலைநாட்டின் மழை, வெயில், குளிர் கலந்த இதமான காலநிலை கோப்பியைவிட தேயிலைப் பயிர்ச்செய்கைக்கே மிக சாதகமாக அமைந்து இருந்தது.
சுவை மற்றும் வாசணை மிகுந்த தேயிலை தூள் குறைந்த விலையில் எம்மிடம் கிடைக்கும் பெற்றுக்கொள்ள கீழே அழுத்தவும்.
.png)
0 Comments